செய்திகள் :

BB Tamil 8: 'உங்கள் பயணம் முடிவடைகிறது' - பிக் பாஸின் அறிவிப்பு; உடைந்து அழும் ஜாக்குலின்

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 102 -வது நாளுக்கான நான்காவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

இன்னும் மூன்று நாள்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்தப் பணப்பெட்டி டாஸ்கில் இம்முறை பிக் பாஸ் பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார். வழக்கமாக பணப்பெட்டி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அதன் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுக்க முதன்முறையாக டாஸ்க் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் பணப்பெட்டி வைக்கப்படும்.

ஜாக்குலின்
ஜாக்குலின்

அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த பெட்டியை எடுத்து வருபவர்களுக்கு அந்த பணம் சொந்தமாகும். ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராவிட்டால், அந்த போட்டியாளர் அப்படியே வெளியேற்றப்படுவார். அந்த வகையில் முதலில் 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். பின்னர் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை ரயான் எடுக்க சென்றார். அவருக்கு 25 விநாடிகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் 17 விநாடிகளிலேயே அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டுவந்து 2 லட்சத்தை தன் வசப்படுத்தினார். இந்த டாஸ்கில் போகப் போகப் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே பணப்பெட்டி டாஸ்க்கில் பணப்பெட்டியை எடுத்து வர சென்ற ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு திரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நான்காவது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.

ஜாக்குலின்
ஜாக்குலின்

8 லட்ச ரூபாய் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், அதை எடுக்க ஜாக்குலின் முன் வந்தார். 35 விநாடிகள் நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜாக்குலின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டார். 'இரண்டு விநாடிகள் தாமதமாக வந்ததால் இந்த பிக் பாஸ் சீசன் 8-ல் உங்கள் பயணம் இத்துடன் முடிவடைகிறது' என்று பிக் பாஸ் அறிவிக்க சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைய ஜாக்குலின் மனமுடைந்து அழுகிறார்.

BB Tamil 8 : 'இந்த வீட்டை திரும்பப் பார்க்க முடியாதோனு பயமா இருக்கு பிக் பாஸ்'- தவிக்கும் ஜாக்குலின்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 102 -வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.இன்னும் மூன்று நாள்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

BB TAMIL 8 DAY 101 : நெருங்கும் விஷால், அன்ஷிதா; தயங்கி நிற்கும் ஜாக்குலின்; தவிக்கும் பவித்ரா

பணப்பெட்டி டாஸ்க்கிற்காக ரயான் மின்னல் வேகத்தில் ஓடியதைத் தவிர இந்த எபிசோடில் பரபரப்பாக வேறொன்றுமே நிகழவில்லை. இறுதிக்கட்டத்தில் இப்படியொரு அசுவாரசியம். மாகாபா ஆனந்தின் என்ட்ரி மட்டுமே சற்றாவது சுவாரச... மேலும் பார்க்க

BB 8 : `உன்னைய நம்பி கொடுத்திருக்கேன்' - பணப்பெட்டி டாஸ்க்கில் பவித்ராவிடம் ஜாக்குலின் சொன்னதென்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 102 -வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.இன்னும் மூன்று நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

BB Tamil 8 : 60 மீட்டர் தூரம்... 30 விநாடி... பணப்பெட்டி டாஸ்க்கில் வீடு திரும்பினாரா விஷால்?!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 102 -வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.இன்னும் மூன்று நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

BB TAMIL 8 : பணப்பெட்டி டாஸ்க்கில் ட்விஸ்ட்... வீடு திரும்ப முடியாமல் எவிக்ட் ஆன போட்டியாளர்?

இன்னும் மூன்றே தினங்களில் நிறைவு பெறவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8.முதல் நாள் அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் என... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 100: பணப்பெட்டி டாஸ்க், திடுக்கிடும் ட்விஸ்ட், நம்ப முடியாத ரிஸ்க்கை எடுத்த முத்து

இன்றைய எபிசோடில் பல சம்பவங்கள். பொங்கல் கொண்டாட்டம், அன்ஷிதாவின் வருகை, பணப்பெட்டிக்காக தன்னுடைய நூறு நாள் உழைப்பை பணயமாக வைத்து முத்துக்குமரன் எடுத்த அபாரமான ரிஸ்க் விஷாலுக்கு ஆதரவாக நின்ற அன்ஷிதா என... மேலும் பார்க்க