சிறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வா்த்தகம் குறித்த கருத்தரங்கம்
Bengaluru : பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி - காவலரால் மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
'வேலியே பயிரை மேய்ந்தாற் போல' என்ற பழமொழியை போன்ற சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் விக்கி என்பவர் நண்பரை போன்று பழகி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த மே மாதம், இதுக்குறித்து புகார் அளிக்க மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு பெற்றோருடன் சென்றுள்ளார் அந்த சிறுமி.

அங்கே இருந்த கான்ஸ்டபிள் அருண் என்பவர் சிறுமியிடம் நட்பாக பேசி, விசாரணை என அழைத்து சென்று, ஹோட்டலில் அவருக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் வீடியோ மற்றும் போட்டோவை பொதுவெளியில் ரிலீஸ் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை சமீபத்தில் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் விக்கி மற்றும் கான்ஸ்டபிள் அருண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு புகாரளிக்க காவல் நிலையத்திற்கு வந்த சிறுமிக்கு மீண்டும் காவலர் ஒருவராலே பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
