செய்திகள் :

Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

post image

கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவே அவர்களது வேலையைச் செய்கிறது என்பதால்!

தற்போது லெவல் டிசைனிங் மற்றும் கதை உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

king studio
king studio

MobileGamer.biz தளம் குறிப்பிடுவதன்படி தற்போது ஃபார்ம் ஹீரோஸ் சாகா (Farm Heros Saga) என்ற ப்ராஜக்டில் பணியாற்றிவந்த 50 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

"லெவல் டிசனிங்கில் இருந்த பெரும்பாலானோர் நீக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் விரைவாக லெவல் டிசைனிங் செய்யும் கருவியைக் கண்டுபிடித்தனர். AI கருவிகள் மனித அணிகளுக்குப் பதில் அமர்த்தப்படுகின்றன.

நகல் எழுதும் குழுவினரின் வேலையை அவர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவே செய்வதனால் அவர்களும் நீக்கப்படுகின்றனர்." என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊழியர் அந்த தளத்தில் தெரிவித்துள்ளார்.

Microsoft office k

லண்டன், ஸ்டாக்ஹோம், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய இடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில கேம்களில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு கார்டனிங் விடுமுறை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கார்டனிங் விடுமுறை என்பது உடனடியாக போட்டி நிறுவனத்தில் சேருவதையும், முக்கிய தகவல்கள் கசிவதையும் தடுப்பதற்காக அலுவலகத்துக்கு வராமலே சில மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை.

வேலையிழப்பு

"செயற்கை நுண்ணறிவால் அதனை உருவாக்கியவர்களே வேலை இழப்பதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது" என மற்றொரு ஊழியர் ஆதங்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கிங் ஸ்டூடியோ, செயற்கை நுண்ணறிவை சாதாரண வேலைகளுக்கு அமர்த்தி அதன் ஊழியர்கள் கிரியேட்டிவ்வாக பணியாற்ற அதிக நேரம் கொடுப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் ஒரு ஆண்டிலேயே அதன் நிலைப்பாட்டிலிருந்து விலகி வேலை நீக்கம் செய்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ChatGPT down: இன்று காலை முதல் திடீரென வேலை செய்யாமல் இடைநிறுத்தமானது Chat GPT!

உலகமுழுவதும் சுமார் 800 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்ட கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் டான் டான் என்று பதில் சொல்லும் ஓபன் AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான செயலியான 'Chat GPT' இன்று காலை முதல் திடீ... மேலும் பார்க்க

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? | Depth

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் Sanchar sathi ( சஞ்சார் சாதி) என்ற செயலியை கடந்த மே மாதம்... மேலும் பார்க்க

China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?

தேனீக்களின் மூளையில் சிறிய மைண்ட் கன்ட்ரோலிங் சிப்களை பொருத்துவதன் மூலம் அவற்றை ராணுவத்துக்குப் பயன்படுத்தும் சைபோர்க்களாக மாற்றும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது சீனா. சைபோர்க் (Cyborg) என்பது ஒரே உயி... மேலும் பார்க்க

Sabih Khan: ஆப்பிள் நிறுவன COO-வாக சபிஹ் கான் நியமனம்; இந்தியாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (Chief Operating Officer) சபிஹ் கான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதுபற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், "நிறுவனத்தின் Senior Vice President... மேலும் பார்க்க

Bitchat: இனி Chat செய்ய Internet தேவையே இல்ல... X இணை நிறுவனரின் புதிய அறிமுகம் பிட்சாட் செயலி!

AI கோலோச்சும் உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்ற சூழலை மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை எக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அறிமுகப்படுத்தியிருக்கிறார். வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்,... மேலும் பார்க்க

BSNL சிம் கார்டை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு BSNL நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ்.என்.எல் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் மக்கள், அவற்றை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு ம... மேலும் பார்க்க