செய்திகள் :

Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல்லும் லோகேஷ் கனகராஜ்

post image

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "இப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நடிகர் செளபின் சாஹிர்தான் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பார். இந்தப் படத்தின் அவருடைய கதாபாத்திரம் அதிகமாகப் பேசப்படும்.

இந்தப் படத்திற்குப் பிறகு அவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பலரும் தேடுவார்கள். அவர் அனேகமாக சென்னைக்குத் தனது இருப்பிடத்தை ஷிஃப்ட் செய்துவிடுவார் என நினைக்கிறேன்.

உபேந்திரா சார் அர்ப்பணிப்புடன் பணிபுரியக்கூடியவர். முழு ஈடுபாட்டுடன் படப்பிடிப்பில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷ்ருதி ஹாசன்தான் எங்களுக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.

நாகர்ஜுனா சாரை இப்படத்தின் சைமன் கதாபாத்திரத்திற்குச் சம்மதித்து முதலில் நடிக்க வைப்பதற்குக் கொஞ்ச நேரமெடுத்தது.

Lokesh Kanagaraj - Coolie
Lokesh Kanagaraj - Coolie

ஆனால், அதிரடியான எனர்ஜியை படத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். அவரைப் பார்த்துத்தான் நான் ஃபங்க் ஹேர் ஸ்டைல் வைக்கத் தொடங்கினேன்.

ஆமீர் கான் சாருடன் பிறந்தநாளை இணைந்து கொண்டாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

ரஜினி சாரை பற்றிப் பேசுவதற்குச் சில நிமிடங்கள் போதாது. அவருடைய பயணித்த இந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

அவையெல்லாம் அனுபவங்களால் நிறைந்தவை. உங்களுடைய 50 ஆண்டுக்கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் அதே ஆகஸ்ட் மாதத்தில் 'கூலி' திரைப்படம் வெளியாவதைப் பெருமையாக் கருதுகிறேன்.

இந்தத் தருணத்தை என்றென்றும் பெருமையுடன் போற்றுவேன். இந்தத் திரைப்படம் உருவாகுவதற்குக் காரணமே அனிருத்தான். அனிருத் எனக்குச் சகோதரரைப் போன்றவர்.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

என்னுடைய தந்தை பேருந்து நடத்துனராக இருந்தவர். அவருடைய 'கூலி' என் 1421.

அதே எண்ணைத்தான் இப்படத்தில் ரஜினி சாருக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். இது என் தந்தைக்கு நான் செலுத்தும் டிரிப்யூட். " எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Nagarjuna: " 'கூலி' திரைப்படம், 100 'பாட்ஷா' படங்களுக்கு சமமானது!" - நாகர்ஜூனா

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்... மேலும் பார்க்க

Anirudh: " 'கூலி' நிச்சயமாக பந்தயம் அடிக்கும்!" - அனிருத்

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்... மேலும் பார்க்க

Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தி... மேலும் பார்க்க

Coolie: "வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார்; அது மாதிரிதான் நாகர்ஜுனா" - ரஜினி

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்... மேலும் பார்க்க

Coolie: ரஜினியின் காலில் விழுந்த லோகேஷ், அனிருத்; ஆமீர் கானின் மாஸ் என்ட்ரி; கூலாக வந்த சௌபின்!

"அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே" எனக் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனெர்ஜிடிக்காக என்ட்ரி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி.... மேலும் பார்க்க

Madhan Bob: பன்முக கலைஞர் மதன் பாப் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

நடிகர் மதன் பாப் இயற்கை எய்தினார். உடல்நலக் குறைவு காரணமாக இன்று மாலை நடிகர் மதன் பாப் காலமானார்.மதன் பாபின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய சிரித்த முகபாவனைதான் இவருக்கான அடையாளம்.Madhan Bob7... மேலும் பார்க்க