செய்திகள் :

Fair Delimitation: ``இந்த 5 விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்'' - உதயநிதி ஸ்டாலின்

post image
மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 'நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், முக்கியத் தலைவர்களின் பெயர் பலகையில் அந்ததந்த மாநில மொழிகளில் எழுத்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இதில் பேசியிருக்கும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மாநில உரிமைகளைக் காக்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைப்பில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு

இங்கு நான் முக்கியமானஐந்து விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. ஒன்றிய அரசின்மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இன்று தொகுதி குறையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மக்கள் தொகை வளர்ச்சியில் பின் தங்கி பிரச்னைகளுக்குள்ளாகியிருக்கிறோம்.

2. தொகுதி மறுசீரப்பைப்பின் வரலாறு

3. இன்றைய தொகுந்தி மறுசீரப்பைபின் நிலை.

4. தென் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்

5. நாம் ஏன் இங்கு ஒன்று திரண்டிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்

இந்த ஐந்து கேள்விகளுக்கான பதிலை புரிந்துகொண்டால், நாம் இந்த ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பில் இருக்கும் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தோம்.

உதயநிதி ஸ்டாலின்

வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்தாலும், தமிழ்நாடு பொறுப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம். ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம். தென் மாநிலங்களின் உரிமைகளை காக்க நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல... மேலும் பார்க்க

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,40... மேலும் பார்க்க

``உங்களுக்கு ஏளனமாக உள்ளதா?'' - நிதிப் பகிர்வு குறித்து நிர்மலா பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

'கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னை... மேலும் பார்க்க

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,"தமிழ்நாட்டில்,... மேலும் பார்க்க

``அந்த அறையில் பணம் வைத்ததே இல்லை!'' - தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து நீதிபதி பதில்

கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம். தீயணைப்பு முட... மேலும் பார்க்க

Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க