செய்திகள் :

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! - ``சர்வதேச சட்ட விதிமீறல்'' - எச்சரிக்கும் ஐ.நா!

post image

இஸ்ரேலுக்கும் - ஹாமஸுக்கும் நடந்து வந்தப் போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்த முதல் கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிந்தது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் நடுப்பகுதியில் யூதர்களின் 'பாஸ்ஓவர்' விடுமுறை வருவதால் அதுவரை போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு அமெரிக்காவின் ஆலோசனைப் படியே நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பேச்சுவார்த்தைகள் பயனற்றவை என்று நம்பினால், முதல் கட்டத்திற்குப் பிறகு போரை மீண்டும் தொடங்கலாம் என்றும் இஸ்ரேல் எச்சரித்திருக்கிறது.

இஸ்ரேல் - காஸா போர்

இந்த நிலையில், காஸாவில் உள்ள முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தில் முதல் நோன்பை துறந்த சில மணி நேரத்தில், 'காஸாவிற்குள் செல்லும் உதவிகள், நிவாரணங்கள் உடனடியாக நிறுத்தப்படுகிறது' என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. பைடன் நிர்வாகத்தின் போது காஸாவிற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்கா, இல்லையென்றால் ஆயுதம் வழங்கப்படுவதை கட்டுப்படுத்துவோம் எனவும் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அதே அமெரிக்காவின் ஆலோசனைப் படியே போர் நிறுத்த ஒப்பந்தம் முதல் உணவு, உதவிக் கட்டுப்பாடு வரை காஸாவுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது இஸ்ரேல்.

அதனால், காஸாவின் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பசி ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. 'இஸ்ரேல் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது" என உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பால் காஸாவில் இருந்த பழங்கள், பொருள்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

காஸா

"இஸ்ரேலின் இந்த முடிவு சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை. உயிர்காக்கும் முக்கிய உதவிகளை வழங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்" என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலின் அறிவிப்புக்கு பிறகு, ஐந்து அரசு சாரா குழுக்கள் இஸ்ரேலின் உச்ச நீதிமன்றத்திடம், காஸாவிற்குள் உதவிகள் கொண்டுசெல்லப்படுவதை தடுக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்

அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் பதவி வெறிக்காக ஜெயலலிதா த... மேலும் பார்க்க

``நடிகர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..'' - கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு பாஜக கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சமநிலை நீர்த்தேக்கத்தை செயல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சிகள் தலைமையில் மேகதாது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதயாத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

Doctor Vikatan: என்தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்துஅவளுக்குபெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும்இப்படியேஇருந்துவிட்டால் என்ன செய்வது எ... மேலும் பார்க்க

``படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்... திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்'' - மணப்பெண் நெகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமானிய குடும்பத்து பெண்ணின் திருமணத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பி வைத்த சம்பவம், மணமக்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த ம... மேலும் பார்க்க

``2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் ப... மேலும் பார்க்க

``இது மூழ்குகிற கப்பல் இல்லை, கரை சேருகிற கப்பல்'' - தேனியில் ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தேனியில் அதிமுக பொதுக்கூட்டம்..அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "தேனி மாவட்டத்த... மேலும் பார்க்க