செய்திகள் :

GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் பிரச்னை" - தேனப்பன்

post image

அஜித் குமார் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்தின் சில மாஸ் காட்சிகளுக்கு இளையராஜாவின் சில பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

அந்தப் பாடல்களுக்கு முறையான உரிமத்தைப் பெறவில்லை என இளையராஜா ராயல்டி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Ilaiyaraja Copyrights - Gangai Amaran
Ilaiyaraja Copyrights - Gangai Amaran

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கங்கை அமரன் ஜி.வி.பிரகாஷ் குறித்து காட்டமாகப் பேசியிருந்தார்.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், கங்கை அமரன் குறித்தும், ஜி.வி.பிரகாஷ் குறித்தும் பேசியிருக்கிறார்.

தேனப்பன் பேசியபோது, "சமீபத்துல கங்கை அமரன் சார் 'ஜி.வி. பிரகாஷ் 7 கோடி ருபாய் சம்பளம் வாங்குறாரு. ஆனா, இளையராஜா பாடல்கள்தான் பயன்படுத்துறீங்க'னு பேசியிருந்தாரு.

ஜி.வி. பிரகாஷுக்கு வேலை தெரியாதங்கிற மாதிரி பேசியிருந்தாரு.

ஜி.வி. பிரகாஷ் அவ்வளவு தங்கமான மனுஷன். அவர் 7 கோடி வாங்குறது கங்கை அமரனுக்கு வயிற்தெரிச்சலானு தெரியல. எத்தனையோ பிரச்னைகள்ல ஜி.வி. பிரகாஷ் விட்டுக் கொடுத்திருக்காரு.

PL Thenappan about Gangai Amaran
PL Thenappan about Gangai Amaran

சமீபத்துலகூட ஒரு படம் ரிலீஸ் சமயத்துல 'என்னுடைய சம்பளத்துக்காகப் படம் நிக்குதா'னு கேட்டு சம்பளத்தை விட்டுக் கொடுத்துப் படத்தை ரிலீஸ் பண்ண உதவியாக இருந்தாரு.

'குட் பேட் அக்லி' படத்துல ராஜா சார் பாடலை யூஸ் பண்ணினது ஜி.வி. பிரகாஷின் தவறு கிடையாது. அது இயக்குநரின் விருப்பம்.

'பிதாமகன்' படத்துலகூட சிம்ரன் நடனமாடுற பாடல்ல எம்.எஸ்.வி. சார் பாடலைத்தான் பயன்படுத்தியிருப்பாங்க. அதுக்குனு அவருக்கு வேலை தெரியாது'னு சொல்ல முடியுமா!" எனக் கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vijay: 'மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு...' - தவெக தலைவர் விஜய் பதிவு

இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவு தினம். இதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல... மேலும் பார்க்க

"அந்த நேர்மைதான் இந்த கதாபாத்திரத்துக்குத் தேவை!" - விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகராகும் பால் டப்பா

ரேப் இசையில் தற்போது மாஸ் காட்டி வருகிறார் பால் டப்பா. இவருடைய உண்மையான பெயர் அனிஷ்.சுயாதீன பாடல்கள் மூலமாக தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடங்கியவர் 'துருவ நட்சத்திரம்' படத்தில் 'His name is John' பாடலைப்... மேலும் பார்க்க

Nayanthara: மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா - வெளியான அப்டேட்

டோலிவுட் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்த 'சங்கராந்தி வஸ்துனம்' திரைப்படம் அதிரடி என்டர்டெயினராக ஹிட் அடித்திருந்தது. அப்படத்தில் வெங்கடேஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், மீன... மேலும் பார்க்க

"மதுரை ரொம்ப பிடிக்கும்" - மீனாட்சி அம்மன் கோயிலில் விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி தரிசனம் | Photo Album

நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்ய... மேலும் பார்க்க

Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வது என்ன?

நடிகர் விஷால் நடித்திருந்த 'மதகஜராஜா' திரைப்படம் இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படங்களின் லைன் அப்களை அவர் அறிவித்திருந்தாலும் ... மேலும் பார்க்க

"உன் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் டார்லிங்" - விஜய் சேதுபதியைச் சந்தித்துக் குறித்து விஷால்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கிற 'ஏஸ்' திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்க... மேலும் பார்க்க