"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
GST 2.0-ல் பாப்கார்ன், கிரீம் பனுக்கு எத்தனை சதவீத வரி? குட் நியூஸ் தான்!
2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியதிலிருந்தே, அதைக் குறித்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது.
ஆனால், சமீபத்தில் ஜி.எஸ்.டி வரியில் அதிகம் கவனிக்கப்பட்ட இரண்டு சர்ச்சைகள்:
ஒன்று, பாப்கார்ன்.
இன்னொன்று, கிரீம் பன்.

பாப்கார்ன் விஷயத்திற்கு முதலில் வருவோம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், பேக் மற்றும் லேபிள் செய்யப்படாத உப்பு மற்றும் காரம் கலந்த பாப்கார்னுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி, அதே பாப்கார்ன் பேக் மற்றும் லேபிள் செய்யப்பட்டிருந்தால் 12 சதவிகித ஜி.எஸ்.டி என நிர்ணயிக்கப்பட்டது. கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது.
"ஏற்கெனவே தியேட்டர்களில் சினிமா டிக்கெட் விலையை விட, பாப்கார்ன் விலை அதிகம். இப்போது பேக் மற்றும் லேபிள் செய்யப்பட்ட பாப்கார்ன்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரிப்பதா?" எனும் கேள்வி பெரிதாக எழுந்தது.
இப்போது என்ன ஆகியிருக்கிறது?
இந்த நிலையில், நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மாற்றத்தில் பாப்கார்னின் வரி விகிதம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
வருகிற செப்டம்பர் 22-ம் தேதி முதல், பேக் செய்யப்பட்டிருந்தாலும், செய்யப்படவில்லை என்றாலும், உப்பு கலந்த அல்லது காரம் கலந்த பாப்கார்ன்கள் 5 சதவிகித ஜி.எஸ்.டி ஸ்லாபிற்குள் வரும்.
மிட்டாய் பட்டியலில் சேர்வதால், கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்.

அடுத்த ஒன்று, கிரீம் பன்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
அப்போது, கோவை அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளர் சீனிவாசன், "பன் மற்றும் கிரீமிற்கு தனித்தனியாக 5 சதவிகித ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. இதை கிரீம் பன்னாக மாற்றும்போது 18 சதவிகித ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
இந்த வீடியோ வைரலாகியது. அதன் பின், அவர் தனிப்பட்ட முறையில் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மன்னிப்பு கேட்டதும் வைரலாகி, பிரச்னை அடுத்த நிலைக்கு சென்றது.
ஆகவே, இப்போதைய மாற்றத்தின் படி, கிரீம் பன்னிற்கு எவ்வளவு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்:
இனி கிரீம், பன், கிரீம் பன் என எதுவாக இருந்தாலும், அனைத்திற்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி தான்.
மொத்தத்தில், இப்போது இந்த இரண்டு சர்ச்சைகளும் முடிவடைந்துள்ளன.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...