செய்திகள் :

Health: உங்க பசி உண்மையானதா, போலியானதா?

post image

‘வயிறு நிறைய சாப்பிடக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சாப்பாட்டைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியலை...’ - டயட்டை சரியாகப் பின்பற்ற முடியாமல் அவதிப்படும் பலரின் புலம்பல் இது.

பசி எடுக்கும்போது, அதற்கேற்ற அளவு சாப்பிடுவது சரியான பழக்கம்தான் என்றாலும், பசி உணர்வு உண்மையானதா, போலியானதா என்பதைக் கண்டறியவேண்டியது அவசியம்.

பசி
பசி

பசி உணர்வென்பது, எல்லா நேரத்திலும் உடல் சார்ந்த மாற்றங்கள் (Physiological Factors) காரணமாக மட்டுமே ஏற்படுவதில்லை.

சில நேரங்களில் மனரீதியான மாற்றங்களாலும் (Psychological Factors) ஏற்படுகிறது’ என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகையப் பசி உணர்வை ‘போலியான பசி உணர்வு’ (False Hunger) என்று கூறுகிறார்கள்.

உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறையத் தொடங்கும்போது பசி ஏற்படுவது இயல்பு. அப்படி இல்லாமல், சில காரணங்களால் பசி உணர்வு செயற்கையாகத் தூண்டப்படுகிறது.

அது ஏன், அதை எப்படித் தடுப்பது, போலியான பசி உணர்வை எப்படிக் கண்டறிவது? விளக்கமாகப் பேசுகிறார் குடல், இரைப்பை மருத்துவர் சந்திரமோகன்.

hunger

நேரம்: சிலர் அட்டவணை போட்டு, நேரத்துக்குச் சாப்பிடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சாப்பிட்டுவிட்டால், சாப்பாட்டு நேரம் வந்தவுடன் காரணமே இல்லாமல் மீண்டும் அவர்களுக்கு பசியெடுக்கத் தொடங்கிவிடும்.

பரிமாறும் விதம்: `சாப்பாடு வேண்டாம்’ என்று நினைப்பவர்கள்கூட அழகாகவும் புதுமையாகவும் பரிமாறப்படும் உணவைப் பார்த்ததும், தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

* சாப்பாட்டின் மணம்: பசி இல்லையென்றாலும், உணவின் வாசனையே சிலருக்குப் பசி உணர்வைத் தூண்டிவிடும்.

* அதிக கார்போஹைட்ரேட்: உணவில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதனால், சாப்பிட்ட அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்கத் தொடங்கிவிடும்.

குளிர்ச்சியான சூழலில் சாப்பிடுவது: பசி எடுக்கும்போது, உடலின் கலோரி அளவு குறையத் தொடங்கி, உடலின் வெப்பநிலை குறையும். பசி அடங்கியதும், வெப்பம் சீரான நிலைக்கு வந்துவிடும்.

குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிப்பது மிகவும் மெதுவாக நடக்கும். பசி அடங்குவதற்கான நேரமும் அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அளவையும் மீறி, அதிகமாகச் சாப்பிட நேரிடும்.

மேலும் தூக்கமின்மை, மனஅழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள், ஏற்கெனவே உட்கொண்ட தரமற்ற உணவு அல்லது குறைவான அளவு உட்கொண்டிருப்பது போன்றவைகூட போலியான பசி உணர்வை ஏற்படுத்தும். ஆக, போலியாகப் பசி ஏற்படும்போது, உணவு உண்ணாமல் நிறுத்திக்கொள்வது நல்லது.’’

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Whatsapp Call-ஐ பார்த்து வீட்டிலேயே பிரசவம்; வெளியில் காத்திருந்த மருத்துவர்கள்; என்ன நடந்தது?

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32), நத்தம் கோபால்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ... மேலும் பார்க்க

சேலம்: நாய் போல் செய்கை; தண்ணீர் குடிக்கச் சிரமம்; ரேபிஸ் நோய்க்குச் சிகிச்சை எடுக்காத தொழிலாளர் பலி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறித் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வ... மேலும் பார்க்க

காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன... மேலும் பார்க்க

உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்கமும்..!

பொதுவாக நாம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, சோடியம் மற்றும் குளோரைடால் ஆனது. இது உடலில் சோடியத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தின் குளோரைடு அளவை பராமரிக்கவும் உணவில் சேர்க்கப்படுகி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album

உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்பு... மேலும் பார்க்க

Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்னணி என்ன?

மிடில் ஏஜ்ல இருக்கிற பலர், நியூஸ் பேப்பரையும் செல்போனையும் கண்ணுக்குப் பக்கத்துல, கொஞ்சம் தூரத்துல வெச்சு படிக்கிறதுக்குப் போராடிக்கிட்டு இருக்கிறதைப் பலரும் பார்த்திருப்போம். இதுவொரு நார்மலான பிரச்னை... மேலும் பார்க்க