புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
Health Drink: காலை பதநீரும், மாலை பதநீரும்... அசல் பதநீரைக் கண்டறிய முடியுமா?
பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்து நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். ஆனால், பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் அதன்பிறகு நுங்கு கிடைக்காது. அப்படி நுங்கு கிடைக்காவிட்டால் பனம் பழமும் கிடைக்காது.

பனைமரத்தில் நுங்கு பிஞ்சாக உருவாகும் முன்னர், அதை நசுக்கி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவர். பின்னர் அதன் நுனிப்பகுதியை லேசாக அறுத்து விடுவர். இவ்வாறு தினமும் சிறிதளவு அது அறுக்கப்படும். அதில் இருந்து சொட்டு சொட்டாக ஒருவகை திரவம் வடியும். அதை மண்பானையில் சேகரிப்பார்கள். சொட்டு சொட்டாக வடியும் அந்த திரவத்தை சேகரிக்கும் பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவினால் கிடைப்பது பதநீர். அவ்வாறு சுண்ணாம்பு தடவாவிட்டால் அதன் தன்மை மாறி ‘கள்’ளாகிவிடும். ஆண் பனை, பெண் பனை இரண்டில் இருந்தும் பதநீர் இறக்கப்படுகிறது. அமிலத்தன்மை ஓரளவு காணப்படும் பதநீர் சுவையாக இருக்கும். இதில் காலை பதநீரும், மாலை பதநீரும் அருந்துவதற்கு இதமாக இருக்கும். கோடைக்காலங்களில்தான் பெரும்பாலும் பதநீர் பெறப்படுகிறது. மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறைந்து காணப்படும்.
* பதநீரை வெறுமனே கோடைக்கு ஏற்ற இயற்கை குளிர்பானம் என்று மட்டும் சொல்ல முடியாது. இதில் கால்சியம், சர்க்கரைச்சத்து, தயாமின், வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. ஆக, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த பதநீரைக் குடிப்பதால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், உடல்சூடு, வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
* இவை தவிர உடல்வீக்கம், நெஞ்செரிச்சல், பித்தம் தொடர்பான கோளாறுகள், கல்லீரல் - மண்ணீரல் வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது பதநீர். சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு பதநீர் நல்ல பலன் தரும்.

* பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் கால்சியம் சத்தும் கிடைக்கிறது. இது பற்களை வலிமையாக்குகிறது. பதநீர் பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுப்பது, ரத்த சோகையை நீக்குவது போன்ற பணிகளைச் செய்கிறது.
* முற்காலங்களில் பதநீர் அருந்தி வந்த பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள் எதுவும் வராமல் இருந்தன. மேலும் அவர்களுக்கு மகப்பேறு காலங்களில் வரும் பிரச்னைகளை நீக்கி குழந்தை பெற்றபிறகு அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருந்தன. இதனால் தாயும், சேயும் நலமாக இருந்தனர்.
* இதுதவிர கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, பற்களில் ஏற்படும் பிரச்னைகள் எதுவும் அவர்களை நெருங்காமல் இருந்தன. அதன் அடிப்படையில் இந்த பதநீரை அருந்துவதன்மூலம் தாயும் சேயும் நலம் பெறலாம்.
* பதநீரை தொடர்ந்து அருந்தி வரும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள் நீங்கும். குறிப்பாக விந்தணுக்களில் உள்ள உயிரணுக் குறைபாட்டை சரி செய்யும். நரம்பு மண்டலம் பலம் பெறுவதோடு தலைமுடி நரைப்பது தள்ளிப்போகும்.
அசல் பதநீர் குடித்தால், அதன் சுவை வெகு நேரம் வரை நாக்கில் நீடித்திருக்கும். கலப்பட பதநீரில் அப்படி உணர முடியாது.
பல இடங்களில் நுரை பொங்க பானையில் பதநீர் ஊற்றி வைத்து வியாபாரம் செய்கிறார்கள். அசல் பதநீரில் நுரை பொங்கி நிற்காது. ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்கு மாற்றும்போது, மேற்பரப்பில் சிறிது சிறிதாக தோன்றக்கூடிய நுரைக்குமிழிகள்கூட உடனே உடைந்து பதநீர் தெளிவாகி விடும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
