செய்திகள் :

ICC: 'இனி ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு பந்துதான்' - ஒருநாள், டி20, டெஸ்ட் விதிகளில் மாற்றம்; முழு விவரம்

post image

ICC புதிய விளையாட்டு வரையறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜூன் மாதம் முதல் இந்த வரையறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதில் ஒருநாள் போட்டிகளில் ஒரே பந்தைப் பயன்படுத்தும் முறை கவனம் பெற்றுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜூலை மாதம் முதல் புதிய வரையறைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.

நடைபெறவிருக்கும் டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, தற்போதுள்ள விதிகளின்படியே நடை பெறும்.

அடுத்த டெஸ்ட் உலகக் கோப்பை சுழற்சியில், வருகின்ற வங்கதேசம் - இலங்கைக்கு இடையான டெஸ்ட் போட்டியிலிருந்து புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.

Ball
Ball

நடைமுறைக்கு வரும் ஒரே பந்து முறை

ஐசிசி அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ள ஒரே பந்து முறையின்படி, 'ஒரு நாள் போட்டிகளில் 1 - 34 ஓவர்களுக்கு இரு முனைகளிலும் இரு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும். 35 வது ஓவரில் அவற்றில் பந்துவீசும் அணியினர் தேர்ந்தெடுக்கும் ஒரு பந்தை 50வது ஓவர் வரை இருமுனைகளிலும் பயன்படுத்துவர்.

ஒருவேளை ஓவர்கள் குறைக்கப்பட்டு இரண்டு அணிகளும் 25 ஓவர் விளையாடினால் ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு பந்து மட்டுமே இரு முனைகளிலும் பயன்படுத்தப்படும்.

முந்தைய விதிமுறைப்படி பந்துவீசும் அணியினருக்கு இரண்டு முனைகளிலும் 50 ஓவர் வரையிலும் இரண்டு புதிய பந்துகள் வழங்கப்படும்.

புதிய விதிப்படி 35 முதல் 50 ஓவர் வரையிலும் பயன்படுத்தப்படாத பந்து, மாற்றுப் பந்துகளுடன் சேர்க்கப்படும். பந்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால் நடுவரே பழைய பந்துக்கு இணையான பந்தைத் தேர்ந்தெடுத்து வழங்குவார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் சப்ஸ்டிடியூட் விதிகளில் மாற்றம்

அடிபடுவதால் பாதிப்பு ஏற்பட்டால் வீரர் மாற்றப்படும் விதிகளிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளனர்.

புதிய விதிகளின்படி, அணியினர் போட்டி தொடங்குவதற்கு முன்பே 5 மாற்று வீரர்களின் பட்டியலை நடுவரிடம் கொடுக்க வேண்டும்.

அதில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்ஸ்மேன், ஒரு வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு ஆல் ரவுண்டர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அரிதாகக் காயம் ஏற்பட்டு ஒரு வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், நடுவர் அவரை ஒத்த மாற்று வீரருக்கு அனுமதி அளிப்பார்.

இவை போக DRS விதிகள் மற்றும் பவுண்டரி லைன் கேட்ச்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

RCB : 'ஈ சாலா கப் நமது ரசிகர்களே...' - ரஜத் பட்டிதர் உற்சாகப் பேச்சு

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. Rajat Patidar - RCB vs P... மேலும் பார்க்க

Shreyas Iyer : 'நாங்க இன்னும் ஓயல; அடுத்த வருஷம் கப் ஜெயிப்போம்!' - ஸ்ரேயஸ் ஐயர் உறுதி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.Shreyas Iyer - RCB vs PBK... மேலும் பார்க்க

RCB : '10 வருசத்துல 4 ஐ.பி.எல் கப் ஜெயிச்சிட்டேன்' - ஆட்டநாயகன் க்ரூணால் பாண்ட்யா

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. ஆட்டநாயகன் விருதை வென்ற ... மேலும் பார்க்க

RCB : "கிரீடம் உங்களுக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது கோலி" - ஸ்டாலின் வாழ்த்து

2025-ம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது பெங்களூரு அணி. 18வருட கனவை நிறைவேற்றியிருக்கிறது பெங்களூரு அணி. வெற்றி பெற்ற பெங்களூரு அ... மேலும் பார்க்க

RCB : 'இந்த வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருந்தனர்' - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. RCB vs PBKSதினேஷ் கார்த்... மேலும் பார்க்க

Virat Kohli: ``என் கரியரின் கடைசி நாள் வரை பெங்களூரு அணிதான்" - விராட் கோலி நெகிழ்ச்சி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு உணர்ச... மேலும் பார்க்க