ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?
கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள் என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியுமாம்.

கேரளாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் பிரான்சிஸ். இவர் திடீரென உயிரிழந்திருக்கிறார். இவரின் சகோதரி ஈவ்லின். கட்டிடக் கலை நிபுணராப் பணியாற்றி வருகிறார். தனது தம்பியின் நினைவிற்காக அவரின் கல்லறையில் QR கோடு ஒன்றை பதித்திருக்கிறார்.
அந்த QR கோட்டை ஸ்கேன் செய்தால் அவரின் புகைப்படங்கள், வாழ்க்கை நினைவுகள் என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். தற்போது இந்த QR கோடு பொறிக்கப்பட்ட கல்லறைத் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...