செய்திகள் :

KL Rahul: `கே.எல்.ராகுலுக்கு இந்த நிலைமையா, அணியில் என்ன நடக்கிறது?' கம்பீர் மீது ஸ்ரீகாந்த் ஆதங்கம்

post image

இந்திய அணியும் பிளெயிங் லெவனும்..!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணிதான் சாம்பியன்ஸ் டிராபியிலும் ஆடப்போகிறது. ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடிவருகிறது. இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபியில் பிளெயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள், எந்த இடத்தில் இறக்கப்படுவார்கள் என்பது குழப்பும் வகையிலேயே இருக்கிறது.

ChampionsTrophy 2025 - India's squad

காரணம், முதல் ஒருநாள் போட்டியில் ஓப்பனிங்கில் ஜெஸ்வால், ரோஹித் ஆகியோர் களமிறங்க, ஒன் டவுனில் கில், 4-வது இடத்தில் ஸ்ரேயாஸ், ஐந்தாவது இடத்தில் அக்சர் படேல், ஆறாவது இடத்தில் கே.எல்.ராகுல், ஏழாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா, எட்டாவது இடத்தில் ஜடேஜா ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

இரண்டாவது போட்டியில், விராட் கோலி பிளெயிங் லெவனில் இடம்பிடிக்கவே, ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டு ஓப்பனிங்கில் ரோஹித், கில் களமிறங்க, ஒன் டவுனில் கோலி களமிறக்கப்பட்டார். மிடில் ஆர்டரில் முதல் போட்டியைப்போலே ஸ்ரேயாஸ், அக்சர் படேல், ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் வரிசையாக இறக்கப்பட்டனர்.

ராகுலா... பண்ட்-ஆ?

இதனால், ராகுலின் இடம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில், டாப் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித், துணைக் கேப்டன் கில், கோலி எனக் கிட்டத்தட்ட லாக் செய்யப்பட்டுவிட்டது. நான்காவது இடம் ஸ்ரேயாஸுக்கு என்றால், ஐந்தாவது இடத்தில் ராகுலா இல்லை ரிஷப் பண்ட்டா என்ற கேள்வியெழுந்திருக்கிறது. கடந்த 2023-ல் உலகக் கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி அசத்தியிருந்தார். அப்போது, ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் எந்தக் குழப்பமும் இல்லை.

கே.எல்.ராகுல்

அடுத்து, 2024 டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் ஆடியிருந்தார். அந்த அணியில் ராகுல் இல்லை. இப்போது, சாம்பியன்ஸ் டிராபி அணியில் இரண்டு பேரும் இருப்பதால் பிளெயிங் லெவனில் யார் தேர்வுசெய்யப்படுவார், எந்த இடத்தில் இறக்கப்படுவார் என்பது புதிராக இருக்கிறது. இந்த நிலையில்தான், 1983 உலகக் கோப்பை கைபற்றிய அணியில் இடம் பிடித்தவரும், 2011 உலகக் கோப்பை வென்ற அணியின் தேர்வுக் குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அணியில் ராகுலுக்கு செய்யப்படுவது நியாயமில்லை என கட்டமாகப் பேசியிருக்கிறார்.

ராகுலின் ரெக்கார்டைப் பாருங்கள்

யூடியூப் நேர்காணலில், தற்போதைய ஒருநாள் தொடரில் ராகுல் களமிறக்கப்பட்ட விதம் குறித்து பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ``ஸ்ரேயாஸ் நல்ல ஃபார்மில் இருக்கிறார், இது இந்தியாவுக்கு சாதகமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ராகுலுக்கு அப்படியில்லை. அக்சர் படேல் 30, 40 ரன்கள் எடுத்திருக்கிறார். இருந்தாலும், ராகுலுக்கு இவர்கள் செய்வது நியாயமில்லை. அவரின் ரெக்கார்டைப் பாருங்கள், ஐந்தாவது இடத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். அணியில் அவரின் இடம் குறித்து அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.

கே.எல் ராகுல், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

கம்பீர் நீங்கள் செய்வது சரியில்லை. சூழ்நிலையைப் பொறுத்து அக்சர் படேலை ஐந்தாவது இடத்தில் இறக்கலாம். ஆனால், அதையே நிரந்தர உத்தியாக வைத்திருக்க முடியாது. இதுபோன்ற மாற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், முக்கியமான ஆட்டங்களில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். என்னுடைய கவலையும் அதுதான்.

இப்படி செய்வது இது நியாயமா?

இடது - வலது காம்பினேஷன் சொல்லி இதை நியாயப்படுத்த முடியாது. அப்படியென்றால், முதல் நான்கு இடங்களில் இடது - வலது காம்பினேஷன் சேர்ப்பது உங்களுக்கு கவலையில்லையா, ஐந்தாவது இடத்துக்கு மட்டும் ஏன்? அக்சர் படேலுடன் எனக்கு இந்தப் பிரச்னையும் இல்லை. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால், ராகுலை பின்வரிசைக்குத் தள்ளினால், ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடுவார். எதற்காக ராகுலின் நம்பிக்கையைச் சீர்குலைக்க வேண்டும்? உலக கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரருக்கு இப்படி செய்வது இது நியாயமா?

கவுதம் கம்பீர் - கே.எல்.ராகுல்

இப்போது ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டியிருக்கிறீர்கள். இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் விளையாட வேண்டும். மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட்டை களமிறக்கி, சாம்பியன்ஸ் டிராபியிலும் அவரையே களமிறக்கி ராகுலை பென்ச்சில் அமரவைப்பார்கள் என்று நினைக்கிறேன். இடது - வலது காமினேஷனை பொருட்படுத்தாமல் உங்களின் சிறந்த வீரரை நீங்கள் ஐந்தாவது இடத்தில் களமிறக்க வேண்டும்." என்று கூறினார்.

தற்போதைய இந்திய அணியில் கே.எல். ராகுலின் இடம் குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்!

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

தோனி வழிநடத்திய இளம் வீரர்கள்; 'UNBEATEN DHONI'S DYNAMITES' நிகழ்ச்சியை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் MS தோனி வழிநடத்திய இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி கோப்பை வென்று சாதனை நிகழ்த்தியது.கிட்டத்தட்ட 12 ஆண... மேலும் பார்க்க

Kohli: "உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்; உயிர்களைக் காப்பாற்றுங்கள்" - ரசிகர்களுக்குக் கோலி அட்வைஸ்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 12) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ``பி... மேலும் பார்க்க

Jos Buttler: ``எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" - தோல்வி குறித்து ஜாஸ் பட்லர்

கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

Rohit Sharma: `இப்படித்தான் சதமடித்தேன்...' - ரகசியம் பகிரும் ரோஹித் சர்மா

கட்டாக்கில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்திருந்தார்.... மேலும் பார்க்க

INDvENG : `சதமடித்த ரோஹித்; சம்பவம் செய்த ஜடேஜா!' - இந்திய அணி தொடரை வென்ற காரணங்கள்

கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை வென்றதன் மூலம் இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 300+ டார்கெட்டைதான் இந்திய அணிக்கு நிர்ணயித்திருந்தது. அப்ப... மேலும் பார்க்க

Rohit Sharma: `கதை இன்னும் முடியல...' - வந்தார் ரோஹித்; இது ஹிட்மேனின் கம்பேக்!

ரோஹித்தின் கரியரில் அவர் சில காலக்கட்டங்களையும் சில இடங்களையும் மறக்கவே மாட்டார். இரட்டைச்சதம் அடித்த மைதானங்கள், 2023 ஓடிஐ உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பை என அந்தப் பட்டியலில் இப்போது கட்டாக் மைதா... மேலும் பார்க்க