LA Lakers: ரூ.86,000 கோடிக்கு விலைபோன கூடை பந்து அணி - முடிவடையும் 46 ஆண்டு லெகஸ...
Mammootty: ``மம்மூட்டிக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்னை..." - MP ஜான் பிரிட்டாஸ் சொல்வது என்ன?
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த நடிகர் சங்கம், ``நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக வரும் செய்திகள் போலியானவை. அவர் ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் விடுமுறையில் இருக்கிறார்.
அதனால்தான் அவர் படப்பிடிப்புக்கு வராமல் ஓய்வு எடுத்துள்ளார். உண்மையில், ரம்ஜான் பண்டிகைக்குப் பிறகு, அவர் மோகன்லாலுடன் மகேஷ் நாராயணனின் படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்புவார்" என்று குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மம்மூட்டியின் நெருங்கிய நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார்.
அதில், ``மம்மூட்டி ஒரு சிறிய உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருக்கிறார், நான் அவருடன் தொலைப்பேசியில் உரையாடினேன்.
நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தபோதிலும், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டதில்லை. இருப்பினும், சமீபத்திய நாட்களில், இதுபோன்ற விவரங்களையும் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...