New Income Tax Bill: "புதிய வருமான வரி மசோதா என்றால் SIMPLE" - நிதியமைச்சர் சொல்வதென்ன?
இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்திய போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "தற்போதுள்ள சட்டத்தில் 800-க்கும் மேற்பட்டுள்ள பிரிவுகள் உள்ளன. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் 536 பிரிவுகள் மட்டுமே உள்ளன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/cagcrlej/Screenshot-2025-02-13-171730.png)
இந்தப் புதிய வருமான வரி மசோதாவில் 5 கொள்கைகளான நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி, ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான மொழி, குறைந்தபட்ச வழக்கு, நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, கற்றல், மாற்றியமைத்தல் மற்றும் திறமையான வரி சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. (Streamlined structure and language, Integrated and concise, Minimised litigation, Practical and transparent, Learn and adapt, and Efficient tax reform (S.I.M.P.L.E)). இந்த சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குழு சட்டத்தை ஆராய்ந்து, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்யும்" என்று பேசினார்.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play