பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
RCB வீரர் யாஷ் தயாள் மீது மேலும் ஒரு வன்கொடுமை புகார்; போக்சோ வழக்கு - அதிகரிக்கும் சிக்கல்
ராயல் சேலஞ்ச் பெங்களூரு ஐ.பி.எல் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது ஏற்கனவே காஜியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் `திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை’ செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி அப்பெண் இம்மாத தொடக்கத்தில் காஜியாபாத் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வழக்கில் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது யாஷ் தயாள் மீது மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். இது யாஷ் தயாளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. 17 வயதேயாகும் அந்த மைனர் பெண் இது தொடர்பாக ஜெய்ப்பூர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

அப்பெண் கொடுத்துள்ள புகாரில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாகவும், என்னை விளையாட்டு வீராங்கணையாக மாற்றுவதாகவும் கூறி என்னை யாஷ் தயாள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடந்த போது ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்தார். கிரிக்கெட் தொடர்பாக ஆலோசனைகள் தருவதாக கூறி வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இரண்டு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக” அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மிரட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததால் புகார் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் மைனர் பெண் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புகார் யாஷ் தயாளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் யாஷ் தயாளுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி இருக்கும் யாஷ் தயாள் இவ்வழக்கிலும் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.