செய்திகள் :

Retro: ``உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' - சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான `கண்ணாடி பூவே' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான `கணிமா' பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இடம்பெறும் திருமண கொண்டாட்டப் பாடல்களின் வரிசையில் இப்பாடலும் இணைந்திருக்கிறது.

Kanima - Retro movie song
Kanima - Retro movie song

இப்பாடலில் சூர்யாவோடு சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடனமாடியிருக்கிறார். இப்பாடல் இன்று வெளியாவதை ஒட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே நகைச்சுவையான உரையாடல் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நிகழ்ந்தது.

பாடல் வெளியாவதற்கு முன்பு ``இப்பாடலில் நான் நடனமாடுவதற்கான ஆடிஷன் வீடியோ இதோ!'' என சந்தோஷ் நாரயாணன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், `` யோவ், இவ்வளவு நாள் எங்கையா இருந்த! சப்ரைஸ் பண்ணிட்ட'' என நகைச்சுவையான பதில் பதிவு ஒன்றைப் போட்டார்.

Kanima - Retro movie song
Kanima - Retro movie song

இதனை தாண்டி சந்தோஷ் நாராயணனின் இந்த நடன பதிவுக்கு நடிகர் சூர்யாவும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதில் கொடுத்திருக்கிறார். அவர், ``கணிமா பாடல் முழுவதும் உங்களைதான் ஜூம் போட்டு பாலோவ் பண்ணினேன் சனா. டான்சராகவும் உங்களைப் பிடித்திருக்கிறது." எனப் பதிவிட்டிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Vijay: ``விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?'' - சாடும் விஜய்

அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் ... மேலும் பார்க்க

`கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்' - ரஜினி வெளியிட்ட வீடியோ! காரணம் என்ன?

மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த மார்ச் 7 ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து இரு பிரிவுகளாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி தொ... மேலும் பார்க்க

தனுஷ் இயக்கத்தில் அஜித்? - தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விகடனுக்குக் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்!

நடிகராகவும் இயக்குநராகவும் பம்பரமாய் சுற்றி வருகிறார் தனுஷ். ̀ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கியிருந்த ̀நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. தனது சக... மேலும் பார்க்க

`நீ பொட்டு வச்ச தங்கக்குடம்!' - `லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

தனுஷ் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் ̀தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனை தாண்டி ̀இட்லி கடை' படத்திற்கான பணிகளையும் மற்றொரு ப... மேலும் பார்க்க

``சிறு வயதில் நான் மளிகை கடையில் வேலை செய்யும் போது..'' - இளையராஜா குறித்து நெகிழும் முத்துக்காளை!

காமெடி நடிகராக நமக்கு பரிச்சயமான முத்துக்காளை குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை த... மேலும் பார்க்க