செய்திகள் :

Rohit Sharma : ``விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" - ரோஹித் சொன்ன விளக்கம்

post image
பார்டர் கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என கணிப்புகள் வெளியானது. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோஹித் இப்போது பேசியிருக்கிறார்

Rohit

சிட்னி மைதானத்தில் பேட்டியளித்த ரோஹித், ``நானேதான் இந்தப் போட்டியிலிருந்து விலகினேன். பயிற்சியாளரோடும் தேர்வுக்குழுவினரோடும் என்னுடைய உரையாடல் எந்த சிக்கலுமற்றதாக இருந்தது. இது முக்கியமான போட்டி. இந்த சமயத்தில் நான் ஃபார்மில் இல்லை எனும்போது ஃபார்மில் இருக்கும் பேட்டர் ஆட வேண்டியது அணியின் தேவையாக இருக்கிறது. அதைத்தாண்டி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை . சிட்னிக்கு வந்தபிறகுதான் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன். அணியிலிருந்து நான் விலகியிருப்பது தேவையான விஷயம் என்கிற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. பெர்த்தில் நாங்கள் வென்றதற்கு ஓப்பனர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் மிக முக்கிய காரணமாக இருந்தது.

200 ரன்களுக்கு மேல் அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அடுத்த 6 மாதங்களில் என்ன நடக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. நிகழ்காலத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் போட்டியிலிருந்து விலகியிருக்கிறேன், அவ்வளவுதான். இது ஓய்வு பெறும் முடிவெல்லாம் அல்ல. வாழ்க்கையில் எல்லாமும் அன்றாடமும் மாறிக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், நிகழும் யதார்த்தங்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கிறேன். நான் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறேன். அதனால் எனக்கு எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பது தெரியும்.

Rohit Sharma

அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த வீரராக இருக்க வேண்டும். அணியை பற்றி யோசிக்காத வீரர்கள் அணிக்குத் தேவையே இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னுடைய கரியர் முழுவதும் இதே எண்ணத்துடன்தான் ஆடியிருக்கிறேன். வெளியே இருக்கும் நிறைய பேர் நம் மீது விமர்சனங்களை வைக்கக்கூடும். ஆனால், ஒரு போதும் எனக்கு என்மீது எந்தவித சந்தேகமும் குழப்பமும் இருந்ததில்லை. நான் எங்கேயும் செல்லப்போவதில்லை. இங்கேயேதான் இருக்கப்போகிறேன்." எனப் பேசியிருந்தார்.

ரோஹித் சர்மாவின் இந்தக் விளக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Team India: ``சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து இந்திய அணி வெளிவர வேண்டும்" - ஹர்பஜன் சிங் ஆதங்கம்

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தோல்வி முகமாக இருக்கிறது.குறிப்பாக, இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப்... மேலும் பார்க்க

`சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்' - ECB-க்கு வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) இழுபறிக்குப் பின்னர், ஐ.சி.சி-யின் முடிவை ஏற்று அடுத்த மாதம் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்த ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பிப்ரவரி 19 தொ... மேலும் பார்க்க

Aus vs Ind: "இதே பயிற்சியாளர்கள் தொடர வேண்டுமா?" - கம்பீர் குழு நோக்கி கவாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பற்ற பிறகு இந்திய அண... மேலும் பார்க்க

Karun Nair 2.0: `5 மேட்ச், 4 சதம், 542 ரன்கள்.. உலக சாதனை' - இந்திய அணியின் கதவை தட்டும் கருண் நாயர்

2016 டிசம்பரில் இந்தியா - இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடைபெற்ற 5-வது போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக முச்சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருண் நாயர். அந்த டெஸ... மேலும் பார்க்க

Virat Kohli: `பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கோலியின் கடைசி தொடரா..' - ஆஸி கேப்டன் கம்மின்ஸ் கூறியதென்ன?

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024-25 முடிவுக்கு வந்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் வென்றதன் மூலம் 3 - 1 என தொடரைக் கைப்பற்றிய ... மேலும் பார்க்க

Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்விக்குப் பின் கம்பீர்

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது 9 ஆண்டுகளாகத் தன்வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவில் இழந்திருக்கிறது.முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க