செய்திகள் :

Rolls-Royce: தலைப்பாகை நிறத்துக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்; வைராலான ரூபன் சிங் யார்?

post image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ரூபன் சிங் என்பவர், 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்பட பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். குறிப்பாக அவரின் தலைபாகை வண்ணத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் கார் இருக்கும் புகைப்படங்கள் இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளன.

1970-களில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த ரூபன் சிங், இஷர் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் மற்றும் ஆல்டேபி ஏ என்ற நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.

இவர் தனது ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் நிறங்களுக்கு ஏற்றவாறு தலைப்பாகை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Rolls-Royce: தலைப்பாகை வண்ணத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்; கவனம் பெற்ற தொழிலதிபர்- யார் இந்த ரூபன் சிங் ?
Reuben singh

இவரது தனித்துவமான பாணி, ஆடம்பரத்தால் இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளார். அவரது கார் கலெக்‌ஷன்களில் மொத்தம் 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் தவிர பல ஆடம்பர கார்களும் இவரிடம் உள்ளன. 3.22 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி ஹுராக்கன், 12.95 கோடி ரூபாய் மதிப்புள்ள புனாட்டி வேய்ரான், மற்றும் ஃபெராரி எஃப்12 பெர்லினெட்டா ஆகியவை அவரது தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மேலும், போர்ஷே 918 ஸ்பைடர் மற்றும் பகானி ஹுவைரா போன்ற அரிய கார்களும் இவரது கார் தொகுப்பில் உள்ளன. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கார் தொகுப்பு வைத்திருப்பதால் ரூபன் சிங், கார் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சிகரமான நபராக மாற்றியுள்ளார்.

இந்திய இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்த பிரபல டிரக் ஓட்டுநர் - யார் இந்த ராஜேஷ்?

இந்தியாவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பலர் முழுநேர தொழிலாக அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலரும் தங்களின் அன்றாட வேலைகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதன் மூலம் சம்பாதித்தும் பிரபலமாகியும் வர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது? - அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் கர்னல் சோஃபியா குரேஷி சொல்வதென்ன?

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் கர்னல் சோஃபியா குரேஷி "ஆபரேஷன் சிந்தூர் ஏன் தேவைப்பட்டது" என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கௌன்... மேலும் பார்க்க

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் - தொழிலதிபர் மகள் சானியா சந்தோக் திருமணம் நிச்சயதார்த்தம்?

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது தந்தையை போல, கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள... மேலும் பார்க்க

``சூப்பர் ஸ்டார் என்ற உச்ச நிலை அடைந்தாலும், அவர் எளிமையின் சிகரம்'' - ரஜினிகாந்த் குறித்து சசிகலா

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதி... மேலும் பார்க்க

``காசா படுகொலைக்கு எதிராக போராட்டம்'' - CPI(M) அறிவிப்பு; மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை... மேலும் பார்க்க

Jaya Bachchan: `செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு ஒரு குத்து' - கோபம் ஏன்? - ஜெயா பச்சன் விளக்கம்

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பாக எம்.பியாக இருக்கிறார். ஜெயாபச்சன் எப்போதும் சற்று கோபப்படக்கூடியவர். அதுவும் அருகில் புகைப்படம் எடுக்க யாராவது வ... மேலும் பார்க்க