செய்திகள் :

RSS: ``இந்தியாவின் தாலிபன் போன்றது ஆர்.எஸ்.எஸ்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமரசனம்!

post image

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். கடந்த 100 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர் (தன்னார்வலர்கள்) 'மாதா பூமி' (தாய்நாடு) நலனுக்காக 'வியாக்தி நிர்மாணம்' (நடத்தை மேம்பாடு) 'ராஷ்டிர நிர்மாணம்' (தேசக் கட்டுமானம்) ஆகியவற்றின் உறுதியை நிறைவேற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர். இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு பயணம் மிகவும் பெருமைமிக்க, புகழ்மிக்க பயணம்" என்றார்.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி
RSS தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தன. காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும், 2017-ம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவரும், முன்னாள் எம்.பி-யுமான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.கே ஹரிபிரசாத், ``ஆர்.எஸ்.எஸ் நாட்டில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறது. நான் ஆர்.எஸ்.எஸ் தாலிபான்களுடன் மட்டுமே ஒப்பிடமுடியும். அவர்கள் இந்திய தாலிபான்கள், பிரதமர் செங்கோட்டையிலிருந்து ஆர்.எஸ்.எஸை பாராட்டுகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற 'சங்கிகள்' யாராவது இருந்தார்களா? நாட்டில் பணியாற்ற விரும்பும் எந்தவொரு அரசு சாரா நிறுவனமும் அரசியலமைப்பின் படி பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் இன்றளவும் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பது வெட்கக்கேடானது. அவர்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது? பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் வரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள்.

பி.கே ஹரிபிரசாத்
பி.கே ஹரிபிரசாத்

அவர்கள் புதிய வரலாற்றை எழுத முயற்சிக்கிறார்கள். பிரிவினைக்கான முதல் தீர்மானத்தை வங்காளத்தில் முன்மொழிந்தவர்கள் ஃபஸ்லுல் ஹக் மட்டுமல்ல சியாமா பிரசாத் முகர்ஜியும்தான். ஜின்னாவும் சாவர்க்கரும் இரு மதங்களுக்கும் தனி நாடு தேவை என்று கருதினார்கள். அதற்காக அவர்கள் காங்கிரஸைக் குறை கூற முயற்சிக்கிறார்கள்." எனக் காட்டமாக விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின்நாட... மேலும் பார்க்க

"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்கிரஸ் எதிர்வினை

ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் ஆணையம்.ராகுல் காந்திக்கு கெடு விதித்த ECIஅதில், இன்னும் 7 நாட்களுக்குள் ராகுல்... மேலும் பார்க்க

மேடையில் காந்திமதி டு ராமதாஸ் - ராமதாஸ் தலைமையிலான சிறப்புப் பொதுக்குழு கூட்டம்|Photo Album

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொ... மேலும் பார்க்க

Rahul Gandhi: "இனியும் தேர்தல்களை திருட விடமாட்டோம்" - வாக்காளர் அதிகார யாத்திரையில் சபதம்!

பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற... மேலும் பார்க்க

'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? - தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நா... மேலும் பார்க்க