செய்திகள் :

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

post image

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக ட்ரம்ப் கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். ஏற்கெனவே சசி தரூர் மற்றும் காங்கிரஸ் இடையே உரசல் போக்கு தொடர்வதனால் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியுடன் சசி தரூர்
ராகுல் காந்தியுடன் சசி தரூர்

இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசி தரூர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

"எங்கள் சொந்தக் கட்சியின் தலைவர் கூறியவற்றில் நான் கமண்ட் செய்ய விரும்பவில்லை. அவர் கூறிய கருத்துக்களுக்கான காரணங்கள் அவரிடம் உள்ளன." எனக் கூறியுள்ளார் சசி தரூர்.

"அமெரிக்க சந்தையை இழந்துவிடக்கூடாது"

"என்னுடைய கவலை அமெரிக்காவுடனான இலக்குகளை அடைவது மற்றும் பொருளாதார கூட்டுறவைப் பற்றியது. இது இந்தியாவுக்கு முக்கியமானது. நாம் சுமார் 90 பில்லியன் டாலர் வரை சரக்குகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதை இழக்கும் இடத்தில் நாம் இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

சிலர் இது நமது ஜி.டி.பி-யில் வெறும் 2 சதவிகிதம் என்கின்றனர். ஆனால் நம் ஏற்றுமதியைக் கணக்கில் கொள்ளும்போது இது மிகவும் முக்கியமானது. அமெரிக்கா நம்முடைய மிகப் பெரிய சந்தைகளில் ஒன்று.

இந்த ஒட்டுமொத்த கட்டண கேள்விகளையும் கருத்தில்கொண்டால், நாம் இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம் அமைய பேரம் பேசுபவர்கள் வலிமையாகவும் தைரியமாக இருக்க விரும்ப வேண்டும்.

பேரம் பேசும்போது நாம் ஒன்றை இழப்போம் ஒன்றைப் பெறுவோம். அதில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். அதே வேளையில் நமது தேசத்தின் சில அடிப்படை விருப்பங்கள் மீறப்படக்கூடாது.

அமெரிக்காவின் சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளும் நாம், அதே வேளையில் பிற நாடுகளிலும் சந்தையை விரிவுபடுத்த வேண்டும்.

நாம் யு.கேயுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகள் நல்ல நிலையில் இருக்கின்றன. ஜப்பானுடனான பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் எல்லாவற்றையும் இழக்க முடியாது. சிலவற்றை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இது நாம் நமக்காக பேரம் பேசுபவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நேரம் என நான் கருதுகிறேன்." எனப் பேசினார்.

புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த சத்யபால் மாலிக்?

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியபோதும் அங்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.கிட்னி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல... மேலும் பார்க்க

"முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள்" - ஜெயக்குமார் காட்டம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார். திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்க... மேலும் பார்க்க

புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய... மேலும் பார்க்க

வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் - மேயருடன் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால... மேலும் பார்க்க

'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். "திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வ... மேலும் பார்க்க

J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர்?

அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) மறுசீரமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிவடைகிறது.மற்ற மாநிலங்களுடன் ஜம்மு & காஷ்மீர் நெருக்காம... மேலும் பார்க்க