உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜை விஜயா மன்னித்துவிடுகிறார். ஆனால் ரோகிணிக்கு மற்றொரு நெருக்கடியை விஜயா கொடுத்துவிட்டார்.
சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில், ரோகிணி கதை ஒரு பக்கம் நகர, மீனாவின் தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஒருபுறம் நகர்கிறது.
மீனா பூ விற்கும் வியாபரத்துடன் சேர்த்து மண்டப டெக்கரேஷன் போன்ற பெரிய ஆர்டர்களையும் செய்யத் தொடங்குகிறார். மீனா டெகரேஷன் பணிகள் செய்யும் அதே இடத்தில் தான் சிந்தாமணி என்ற பெண் ஆர்டர்கள் எடுத்து செய்து வருகிறார்.
மிரட்டல் பேர்வழியான சிந்தாமணி, அடியாட்களை வைத்து மண்டப மேனேஜர்களை மிரட்டி ஆர்டர் எடுப்பவர். மீனாவுக்கு ஒரு மண்டபத்தில் ஆர்டர் கிடைத்து அலங்காரப் பணிகளை நேர்த்தியாகச் செய்ததைப் பார்த்து அடுத்தடுத்து ஆர்டர்கள் வருகின்றன. ஆனால் அவற்றை சிந்தாமணி கெடுக்கிறார். ஆர்டர்களை மிரட்டி வாங்கிவிடுகிறார்.
மீனா ஆர்டருக்காக டெமோ டிசைன் செய்து எடுத்துச் சென்றைதையும் ஆள் வைத்து சிந்தாமணி நாசமாக்குகிறார். `இந்தப் பகுதியில் நான் மட்டும் தான் இந்த பிஸ்னஸ் செய்வேன், நீ குறுக்கே வர வேண்டாம்' என்று மீனாவை மிரட்டுகிறார்.
மீனா நேர்மையாகத் தொழில் செய்ய நினைக்கிறேன், நான் கண்டிப்பாக முன்னேறுவேன் என்று சபதம் எடுக்குறேன். இனி மீனா vs சிந்தாமணி என்ற ரீதியில் கதை நகரும், இந்த விவகாரத்தில் இன்னும் முத்து தலையிடவில்லை.
மற்றொருபுறம் பார்வதியும், அண்ணாமலையும் விஜயாவுக்கு அட்வைஸ் செய்து விஜயாவை சமாதானப்படுத்துகின்றனர். ரோகிணி மலேசியாவுக்குப் போய்விடுவார் என்று மிரட்டுகின்றனர். விஜயாவும் மனம்மாறி ரோகிணி, மனோஜிடம் பேசிவிடுகிறார். ரோகிணியை வீட்டிற்கு அழைக்கிறார். முதலில் கோவத்தை வெளிப்படுத்திய ரோகிணி பின்னர் வித்யாவின் அட்வைஸை கேட்டு வீட்டிற்கு செல்கிறார்.
விஜயாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். இந்தப் பிரச்னையால் மனோஜை நம்பி இனி எதையும் செய்யக் கூடாது என்பதை ரோகிணி புரிந்து கொண்டார். கிரிஷ் விவகாரம் தெரிந்தால் தன் கதை காலி என்பதையும் ரோகிணி உணர்ந்து கொண்டார்.
நேற்றிரவு வெளியான புரோமோவில், மனோஜின் ஷோரூம் அண்ணாமலையின் செட்டில்மன்ட் பணத்தில் வாங்கியது என்பதால் அண்ணாமலை தான் ஓனர் என்று முத்து சொல்கிறார். கடையை மனோஜ் சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றும், அவர் ஏமாளித்தனமாக இருக்கிறார் என்றும் முத்து சொல்ல, அதை அனைவரும் ஆமோதிக்கின்றனர். அண்ணாமலை ஷோரூமுக்கு ஓனர் ஆகிறார். முத்து மாலை அணிவித்து கடையில் இருக்கும் அனைவருக்கும் இந்தத் தகவலைச் சொல்கிறார்.
விஜயா இதனால் மனோஜ், ரோகிணியை அழைத்து, மலேசியாவில் இருந்து 27 லட்சம் பணம் வாங்க வேண்டும் என்று சொல்கிறார். ஷோரூம் மீண்டும் மனோஜ் கைகளுக்கு வரவேண்டுமெனில் ரோகிணி தன் மாமாவை அழைத்து பணம் கேட்க வேண்டும் என்று விஜயா சொல்கிறார். ரோகிணிக்கு புதிய பிரச்னை வந்துவிட்டது. அவர் 27 லட்சத்தை எப்படி புரட்டுவார், அதற்கு என்ன கதை சொல்லப் போகிறார் என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியும்.