மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
Smoking: ஒரு சிகரெட் உங்கள் வாழ்நாளில் 20 நிமிடங்களை குறைக்கிறது - புதிய ஆய்வில் பகீர் தகவல்!
புகைப்பிடிப்பது உலகம் முழுவதும் பரவி காணப்படும் தீய பழக்கமாகும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வொன்றில் 20 சிகரெட்டுகள் ஒரு நபரின் வாழ்நாளில் 7 மணிநேரத்தைக் குறைத்துவிடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிகரெட்டும் ஒரு நபரின் வாழ்வில் 20 நிமிடங்களைக் குறைக்குமாம். இது ஆண்களுக்கு 18 நிமிடமாகவும் பெண்களுக்கு 22 நிமிடமாகவும் இருக்கும் என்கின்றனர்.
smoking -ஆல் ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும்!
தற்காலத்தில் மனித ஆயுட்காலத்தில் அதிகம் தாக்கம் செலுத்தும் ஒன்றாக புகைப்பழக்கம் திகழ்கிறது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரிதின் மது மற்றும் புகை ஆய்வு குழுவைச் சேர்ந்த டாக்டர் சாரா ஜாக்சன், "புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கெடுதல் என்பதை மக்கள் அறிந்திருந்தாலும் அதன் விளைவுகள் எவ்வளவு மோசமானவை என்பதை உணராமல் இருக்கின்றனர். தொடர்ந்து புகைப்பவர்கள் சராசரியாக தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கின்றனர். அதாவது, வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் அன்புக்குரியவர்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் இழக்கின்றனர்" என்கிறார்.
ஒரு சிகரெட்கூட கூடாது!
புகைப்பழக்கத்தை கைவிடுவது வாழ்நாளை அதிகரிப்பதில் உடனடியாக பலனளிக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 10 சிகரெட் புகைக்கும் ஒருவர் ஜனவரி 5-ம் தேடி புகைப்பழக்கத்தை கைவிட்டால், ஜனவரி 12ம் தேதி அவரது வாழ்நாளில் ஒருநாள் அதிகரித்திருக்கும்.
"நீங்கள் எந்த வயதில் புகையை நிறுத்தினாலும் அதனால் பயனடைவீர்கள். ஆனால் முழுமையாக நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பதற்கு ஆரோக்கியமான அளவு என்ற ஒன்று இல்லவே இல்லை. ஒரு நாளுக்கு 20 சிகரெட் பிடிப்பவருக்கும் ஒருநாளுக்கு ஒரு சிகரெட் பிடிப்பவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பில் 50% தான் வித்தியாசம்" என்கிறார் சாரா.
நம்மால் தடுத்து நிறுத்தக் கூடிய மரணங்களை உருவாக்குவதில் முக்கிய காரணியாக இருக்கிறது சிகரெட். இது ஒருவகையில் நாமே உருவாக்கிக்கொள்வது. ஆண்டுமுழுவதும் 80 லட்சம் மக்கள் சிகரெட்டால் பலியாகின்றனர். இங்கிலாந்தில் கேன்சரால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேருக்கு புகை பிடிப்பதாலேயே கேன்சர் உருவாகிறது.
2021ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 13 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் சிகரெட் பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இது உலகளாவிய எண்ணிக்கையில் 17.8% என்கிறது உலக சுகாதார அமைப்பு.
சிகரெட் உங்கள் வயோதிகத்தின் சில ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது என எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார் சாரா. ஏனெனில் புகைப்பிடித்தல் தொடர்பான நோய்கள் ஏற்பட்டால் பலரும் 40-களிலேயே இறந்துவிடுவதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.