கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்
உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் சுமார் 12,000 பேர் வேலைகளை இழக்க நேரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற உயர் அதிகாரிகளின் சம்பளம் குறித்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
* அதன்படி டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.கிரிதிவாசனின் சம்பளம் 2025 நிதியாண்டில் 4 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. அவரின் சம்பளம், அலவன்ஸ் என எல்லாவற்றையும் சேர்த்துஆண்டுக்கு 26.52 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார்.

* டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான என்.ஜி. சுப்பிரமணியம் கடந்த மே 2024 வரை 11.55 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார்.
* டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என். சந்திரசேகரன் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். 2025 நிதியாண்டில் மட்டும் 15 சதவீத சம்பள உயர்வைப் பெற்றிருக்கிறார். அதன்படி 155.81 கோடி ரூபாயை அவர் சம்பளமாகப் பெறுகிறார்.

* Non-Executive இயக்குநர்களான ஹேன் சோரன்சென் மற்றும் பிரதீப் குமார் கோஸ்லா ஆகியோர் தலா 2.74 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகின்றனர். அதேபோல அதே பணியை செய்யும் கேகி மிஸ்திரி மொத்தம் 3.06 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுகிறாராம்.