TVK, VCKவை கூட்டணிக்குள் கொண்டுவர BJPயை வெளியேற்றுமா ADMK? - Kalyanasundaram Interview
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற தலைப்பிலான தேர்தல் பிரசார பயணத்தை, கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. கோயில்களைக் கட்டுப்படுத்தும் உரிமை அரசுக்கு இருக்கக் கூடாது என்பது இந்துத்துவ அமைப்புகள் நீண்டகாலமாக கூறிவரும் ஒன்று. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையைக் கலைத்துவிடுவோம் எனக் கூறுகிறது பாஜக. இந்நிலையில் பிரசார பயணத்தின்போது அறநிலையத்துறை கோவில் வருமானத்தில் கல்லூரிகள் கட்டுவது சதி வேலை எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. காமராஜர் காலம் முதலே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. 1981-ம் ஆண்டு திண்டுக்கலில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அருள்மிகு பழனியாண்டவர் பல்தொழில்நுட்ப கல்லூரியில் அறநிலைய துறை சார்பாக கட்டப்பட்ட ஒரு நிர்வாகக் கட்டடத்தை 2017-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே திறந்துவைத்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய பேச்சுகள் திடீரென வெளிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவாகப் விமர்சிக்கப்படுகிறது. அதிமுகவை விழுங்குவது தான் பாஜக செயல் திட்டம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறிவரும் நிலையில், அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் அதிமுக செய்தி தொடர்பாளர்