இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
UP: `பள்ளி மூடல்' குழந்தைகள் அழும் வீடியோ போலியா? நாடகமாடிய ஆசிரியர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?
மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் குறைவான குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமத்தில் உள்ள குழந்தைகள் பக்கத்து கிராமத்திற்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கூறி அப்பள்ளியை அருகில் உள்ள கிராமத்தோடு இணைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தவறான தகவல் பரவியது.

மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் இன்று முதல் இந்த பள்ளி நிரந்தமாக மூடப்படுகிறது என்று அவர்களிடம் கூற,
பள்ளிக்கு வந்த குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகள் பள்ளியை மூடியிருப்பதை பார்த்து அழும் காட்சியும் பெற்றோர்கள் அதை பார்த்து அழும் காட்சியும் இணையத்தில் பரவி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஆனால், அந்த வீடியோ வெளியானவுடன் மாநில கல்வித்துறை இது குறித்து விசாரணை நடத்தியது. இதில் அந்த வீடியோக்கள் பள்ளி முதல்வரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், மாணவர்களை பயன்படுத்தி இது போன்று போலி வீடியோ உருவாக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
விசாரணையில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள பள்ளியை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் பள்ளியோடு இணைப்பது தொடர்பாக எந்த வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.
மாவட்ட நீதிபதி சந்தோஷ் குமாரும் பள்ளி எந்த வித பிரச்னையும் இல்லாமல் செயல்படுவதை உறுதிபடுத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் குசும்லதா பாண்டேதான் இது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், `மாநில அரசு 50 குழந்தைகளுக்கும் குறைவான பள்ளியை மூடுவதாக கூறியதற்கு, மக்களிடம் அனுதாபத்தை வரவழைக்க, நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்க மாணவர்களை பயன்படுத்தி இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர்' என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பள்ளி முதல்வர் குசும்லதா பாண்டே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு சரியான நேரத்தில் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்காத பிளாக் கல்வி அதிகாரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 50 குழந்தைகளுக்கும் குறைவான பள்ளிகளை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 ஆயிரம் பள்ளிகளை மூடப்போவதாக மாநில அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு கிராமத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால் அந்த எதிர்ப்புகளையும் மீறி மாநில அரசு ஒவ்வொரு பள்ளியையும் மூடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.