செய்திகள் :

US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை - `சார்லி கிர்க்' யார்?

post image

சார்லி கிர்க் - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

'அமெரிக்கன் கம்பேக் டூர்' (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், 'இடதுசாரிகளுக்கு எதிரான கொள்கைகள்' குறித்து பேசி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில், நேற்று சார்லி கிரிக் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, 'கடந்த 10 ஆண்டுகளில், எத்தனை மூன்றாம் பாலின அமெரிக்கர்கள் வெகுஜன கொலையாளிகளாக (துப்பாக்கி சூட்டு நடத்துபவர்களாக) இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?' என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சார்லி கிர்க் (நடுவில்)
சார்லி கிர்க் (நடுவில்)

யார் இந்த சார்லி கிர்க்?

சார்லி கிர்க்கின் இந்தக் கொலை அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்குக் காரணம், இவர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ஆவார்.

31 வயதே ஆகும் இவர், கடந்த அதிபர் தேர்தலில், ட்ரம்ப் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.

வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட இவருக்கு, அமெரிக்க இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. இதையொட்டி, இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, இளைஞர்களிடையே ட்ரம்பிற்காக வாக்குகளைச் சேகரித்தார்.

விமர்சனங்கள்

இவரை சுற்றி பல பல விமர்சனங்களும் உண்டு. முன்னர், 'கரியருக்கு முக்கியத்துவம் செலுத்துவதை விட, குழந்தைகளைப் பெற்றுகொள்ளுங்கள்' என்று சார்லி கிர்க் கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

2023-ம் ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில், "வாகனம் ஓட்டுவதால், விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 மக்கள் இறக்கிறார்கள். இது ஒரு விலை.

இந்த விபத்துகளைத் தடுக்க வேண்டுமானால், நாம் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. ஆனால், வேகம், பயணம் போன்ற காரணங்களுக்காக, நாம் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருகிறோம். இதனால், அந்த 50,000 உயிர்கள் போவது ஒரு விலை தான்.

அதே மாதிரி, குடிமக்களுக்கு துப்பாக்கி வைப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கும்போது, ஒரு சில துப்பாக்கி மரணங்கள் நடக்கத்தான் செய்யும். அது அதற்கான விலை" என்று குடிமக்களுக்கு துப்பாக்கி தர வேண்டும். அதற்காக அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

சார்லி கிர்க்கின் மரணத்திற்கு, ட்ரம்ப் "மாபெரும், புகழ்பெற்ற, சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவின் இளைஞர்களின் இதயத்தை சார்லியைப் போல் யாரும் புரிந்துகொண்டதில்லை. அவர் அனைவராலும், குறிப்பாக என்னால், நேசிக்கப்பட்டார் மற்றும் போற்றப்பட்டார். இப்போது அவர் நம்மிடையே இல்லை. என்னுடைய மற்றும் மெலனியாவின் அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விஜய்யின் சுற்றுப்பயணம்: "இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" - சீமான்

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்க... மேலும் பார்க்க

பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்' - டிடிவி தினகரன்

மதுரை விமான நிலையத்துக்கு பெயர்மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. 'பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்' என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளை... மேலும் பார்க்க

சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உப... மேலும் பார்க்க

``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தின... மேலும் பார்க்க