Vijay: "தம்பி விஜய் அப்படிக் கூறவில்லையே" - பாஜக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்குத் தமிழிசை பதில்
பாஜக - தவெக கூட்டணி குறித்து முன்னாள் தெலங்கானா ஆளுநர் மற்றும் பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது...
"பாஜக உடன் தவெக கூட்டணி இல்லை என்று அந்தக் கட்சியிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தவெகவின் தலைவர் தம்பி விஜய். விஜய் அப்படி எதுவும் கூறவில்லை.
அதைவிடுத்து, தவெகவைச் சேர்ந்த பிறர் கூறுவதற்கு என்னால் எந்தப் பதிலையும் சொல்ல முடியாது.

கூட்டணி குறித்து என்னுடைய கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் பேசுவார்கள். இன்று அனைவரும் ஒன்றுகூடிப் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திமுக ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஆட்சி. அதை நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து" என்றார்.
பின்னர் அவரிடம், 'பாஜக கூட்டணியில்தான் பாமக இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, "சமீபத்திய கூட்டணியில் பாமக எங்களோடுதான் இருந்துகொண்டிருக்கிறார்கள்" என்று பதிலளித்துள்ளார்.
'ராமதாஸ் திமுக கூட்டணியை நோக்கி நகர்கிறாரே?' என்று கேட்டபோது, "அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb