செய்திகள் :

Wayanad: பழங்குடியை காரில் இழுத்துச் சென்ற கொடூரம்; பதற வைக்கும் சம்பவம்.. என்ன காரணம்?

post image

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் கபினி நதியின் 2 கிளைகள் சங்கமிக்கும் பகுதி கூடல்கடவு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள செக் டேம் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்றிருந்தனர். அதில் இரண்டு கார்களில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியான மாதன் என்பவர் அவர்களை சமாதானம் செய்யச் சென்றுள்ளார். இதையடுத்து சுற்றுலாவுக்காக வந்திருந்த ஒரு தரப்பினர் மாதனை தாக்கியதுடன், அவரது கைகளை காரின் டோரில் சிக்க வைத்து காரை இயக்கியுள்ளனர். இதனால் மாதன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு மாதனை மீட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாதன்

மாதனை விட்டுவிட்டு காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து மாதன் மானந்தவாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கால், விரல்கள் சாலையில் உரசியதால் பிய்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் அந்த கார் மலப்புறம் மாவட்டம் குற்றிப்புறம் முஹம்மது ரியாஸ் என தெரியவந்துள்ளது.

வயநாட்டில் காரில் இழுத்துச் செல்லப்பட்ட மாதன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சுற்றுலா வந்த இடத்தில் இரண்டு கார்களில் வந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மாதன் அவர்களை தடுக்கச் சென்றுள்ளார். ஒரு காரில் வந்த 4 பேர் சேர்ந்து மாதனை தாக்கி காரில் வைத்து இழுத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துஷார் பிஷ்ட், பிரேசில... மேலும் பார்க்க

Chhattisgarh: முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக கண்டெடுப்பு - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் ஜனவரி 3-ம் தேதி பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சுரேஷ் சந்தி... மேலும் பார்க்க

Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்திய மாணவி

ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி கூறியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமி... மேலும் பார்க்க

விருதுநகரில் போலி சுங்கத்துறை அதிகாரி கைது- மோசடிக்கு வலையா? போலீஸ் விசாரணை

விருதுநகர் தனியார் லாட்ஜில் சுங்கத்துறை அதிகாரி என பொய் சொல்லி ரூம் எடுத்து தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் புல்லலக்க... மேலும் பார்க்க