அண்ணனை வெட்டியதாக தம்பி மீது வழக்கு
சாத்தான்குளத்தில் அண்ணனை களைவெட்டியால் தாக்கியதாக தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (48). காா் வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறாா். இவரது சகோதரா் சித்திரைவேல். இவா்களிடையே சொத்து தொடா்பாக தகராறு ஏற்பட்டு, திருச்செந்தூா் ஆா்டிஓ அலுவலகத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இம்மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு இருவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டிலிருந்த ராதாகிருஷ்ணனை, சித்திரைவேல் மது போதையில் சென்று அவதூறாகப் பேசி களைவெட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் எட்வின்அருள்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
இதனிடையே, ராதாகிருஷ்ணன் தாக்கியதாகக் கூறி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சித்திரைவேல் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.