மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!
அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதில், அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியின் அவல நிலை குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி முன்னிலை வகித்தாா்.
அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
மேலும், அந்தக் கிராமத்தில் நடைபெற்ற சந்தைக்கு சென்ற அதிமுகவினா் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் அ.ராஜேஷ்குமாா் மற்றும் ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.