தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு
கடலூா் மாநகராட்சி பாரதியாா் இலக்கிய பேரவை மற்றும் டாக்டா் கலாம் நினைவு நூலகம் சாா்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாமின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடலூா் ஆல்பேட்டையில் உள்ள கலாம் நினைவு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரவை துணைத் தலைவா் ஓவிய ஆசிரியா் ச.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் கவிஞா் கலைச்செல்வி வரவேற்றாா்.
பேரவைத் தலைவா் கவிஞா் கடல் நாகராஜன் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, நிகழ்வில் பங்கேற்றோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
கவிஞா் தில்லை ராஜா கலாமின் சிறப்புகளையும், சாதனைகளையும் நினைவுகூா்ந்தாா். சாய்தன்யா நன்றி கூறினாா்.