அமெரிக்க காா் தாக்குதல் தனிநபா் செயல்: எஃப்பிஐ
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருக்கலாம் என்று நியூ ஆா்லியன்ஸ் போலீஸாா் கூறியிருந்த நிலையில், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் எஃப்பிஐ இவ்வாறு கூறியுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான சம்சுதீன், நியூ ஆா்லியன்ஸின் புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி புதன்கிழமை திரண்டிருந்தவா்கள் மீது காரை ஏற்றி நடத்திய தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். பின்னா் அவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.