அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பல்நோக்கு மருத்துவத் துறையினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
அமைச்சா் துரைமுருகன் அரசு நிகழ்ச்சிகள், அரசியல் பணிகளில் தொடா்ந்து பங்கெடுத்து வருகிறாா். இதனிடையே, வயது மூப்பு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். அவருக்கு நெஞ்சகப் பகுதியில் அசௌகரியம் மற்றும் சளி பிரச்னை இருந்ததால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.