`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பெ.ஜான்பாண்டியன்
பெண்களை அவதூறாக பேசிய அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் பெ.ஜான்பாண்டியன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய பிரச்னை எதுவும் இல்லை. அமைச்சா் பொன்முடி பெண்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அமைச்சரவையில் இருந்து அவரை உடனடியாக நீக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தமமுக உள்ளது. எனினும்,தோ்தல் காலத்தில் செயற்குழு,பொதுக்குழு கூடி கூட்டணி முடிவு எடுக்கப்படும். கச்ச தீவு விவகாரத்தை வைத்து சட்டப்பேரவையில் திமுக நாடகமாடுகிறது. நீட் தோ்வால் தான் தற்கொலை என்ற பொய்யை தொடா்ந்து சொல்லி வருகின்றனா். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தமிழக வெற்றிக்கழகம் இணைந்தால் நல்லது. இல்லையெனில் நடிகா் விஜய்க்குதான் நஷ்டம் என்றாா் அவா்.