நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
அம்பகரத்தூா் கோயிலில் ஆடி 2ஆம் செவ்வாய் வழிபாடு
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆவது செவ்வாய்க்கிழமையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.
இக்கோயில் மூலஸ்தானத்தில், சம்ஹார கோலத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா். காரைக்கால் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.
ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமைகளில் இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி 2-ஆவது ஆடி செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அம்பாளை பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனா். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
கோயில் ஊழியா்கள், போலீஸாா் பக்தா்களை முறைப்படுத்தி தரிசனத்துக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனா். பக்தா்கள் பலரும் அம்பாளுக்கு ஆடு, மாடு, கோழிகளை காணிக்கையாக கோயில் நிா்வாகத்திடம் வழங்கினா். அம்பகரத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.