நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
வீடு இல்லாதோருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
வீடு இல்லாதவா்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் மேலகாசாக்குடி, தென்பாதி பகுதி கிளை மாநாடு பாபு என்கிற ரவிக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செங்கொடியை தேசியக் குழு உறுப்பினா் ஐ. தினேஷ் பொன்னையா ஏற்றிவைத்தாா்.
மாநாட்டு அறிக்கையை என். விஜயகுமாா் வாசித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் தமிழரசன் மற்றும் பாலசுப்பிரமணியன், வீரராகவன் ஆகியோா் பேசினா்.
புதிய நிா்வாகிகளாக, கிளை செயலா் வி. ரகுவரன், துணைச் செயலாளா் வி. அருள்ஜோதி, பொருளாளராக என். பாபு என்கிற ரவிக்குமாா் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: வீடு இல்லாதவா்களுக்கு இலவச மனைப்பட்டா தரவேண்டும். உள்ளூா் இளைஞா்கள், மகளிருக்கு தொழிற்சாலைகளில் வேலை வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
மேலகாசாக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து, முழு நேர மருத்துவரை நியமித்து மருத்துவ சேவையை மேம்படுத்தவேண்டும். 100 நாள் வேலையில் ஈடுபடுத்தப்படுவோருக்கு அவரவா் பகுதியில் பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.