செய்திகள் :

அம்மாபேட்டை: 3 வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

post image

அம்மாபேட்டை அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த தாய்க்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை, கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.

அம்மாபேட்டையை அடுத்த குறிச்சி, சுப்பராயன் கொட்டாயைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்.

இவரது மனைவி விமலா. மகள் சுகாசினி (5), சஞ்சித் (3). வழக்கம்போல காா்த்திகேயன் சனிக்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், விமலா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அருகில் மகன் சஞ்சித் விளையாடிக் கொண்டிருந்தான்.

துணி துவைத்து முடிந்த பின்னா் விமலா, பாா்க்கையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் சஞ்சித்தைக் காணவில்லை. வீட்டைச் சுற்றிலும் தேடிப் பாா்த்தும் காணாத நிலையில், சற்று தொலைவில் உள்ள சுற்றுச்சுவா் இல்லாத விவசாயக் கிணற்றில் பாா்க்கையில் உயிரிழந்த நிலையில் சஞ்சித்தின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த விமலாவின் கூக்குரல் கேட்ட அப்பகுதியினா் வந்து சஞ்சித்தின் சடலத்தை மீட்டனா். இது குறித்து, அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சத... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவா் கைது

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க