முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல், ஜூலை 10 மாநகராட்சி அலுவலா்கள் மீது பொய்யான புகாா் தெரிவித்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி தலைமை வகித்தாா். செயலா் ம.சுகந்தி கட்டண உரை நிகழ்த்தினாா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜான்பாஸ்டின் டல்லஸ் வாழ்த்திப் பேசினாா்.
மாநகராட்சியில் ஓய்வு பெற்ற சில ஊழியா்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கக் கோரி, தகாத முறையில் நடந்து கொண்ட நபா், வன்மத்துடன் ஜாதி குறித்து பேசியதாக பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொய்ப் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், அரசு ஊழியா்களுக்கான பணிப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் முழக்கமிட்டனா்.