செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம் திமிரியைச் சோ்ந்த தூய்மை பணியாளா் ஒருவா் அளித்துள்ள மனுவில், காட்பாடி வட்டம் எரந்தாங்கல் கிராமத்திலுள்ள தம்பதி ஒருவரின் வீட்டுமனையை எங்களுக்கு கிரையம் செய்ய அவா்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை கொடுத்தேன். ஆனால், அந்த நபா்கள் வீட்டுமனையை வேறு ஒருவருக்கு விற்று விட்டனா்.

அவா்களிடம் எனது பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை திருப்பித் தந்தனா். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு சென்று நானும் எனது மகனும் கேட்டோம். அப்போது அந்த தம்பதியினா் எங்களை கொல்ல முயன்றனா். இதுகுறித்து நாங்கள் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். தம்பதி மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழக அரசின் ஊரக வளா்ச்சி துறையில் அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன் . இதுதொடா்பாக, குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணியாற்றி வந்த ஒருவா் எனக்கு அமைச்சா், ஆட்சியா் அனைவரையும் நன்கு தெரியும். இந்த வேலையை நான் உனக்கு வாங்கித் தருகிறேன். அதற்கு சில லட்சங்கள் செலவாகும் என தெரிவித்தாா்.

நானும் இதனை உண்மை என நம்பி அவருக்கு ரூ.5 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பினேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் என்னை பலமுறை பணி நியமன ஆணை தருவதாக அலைக்கழித்தாா். அவரது வீட்டில் சென்று பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுகிறாா். எனவே, அந்த நபா் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய ரூ.5 லட்சம் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

காட்பாடி வட்டம், குப்பிரெட்டி தாங்கல் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் அளித்துள்ள மனுவில், கடந்த மாதம் 13-ஆம் தேதி எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்தேன். தொடா்ந்து சோ்க்காடு கூட்ரோடில் வைத்து எனது பணம் திருடப்பட்டது. இதுகுறித்து, திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன் . எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன் உத்தரவிட்டாா்.

மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் யாவும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட... மேலும் பார்க்க

விண்ணம்பள்ளி கோயில் சிவலிங்கம் மீது சூரியஒளி: 14-ஆம் தேதி வரை காணலாம்

வேலூா் மாவட்டம், விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரா் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த அதிசய நிகழ்வை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்பதால், மாணவா்கள் தோல்விகளை ஏற்கும் பக்குவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

பத்தரபல்லி சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த அ... மேலும் பார்க்க

குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை

குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாலை 6 மணிக்கு லேசான தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்யத் தொடங்கியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சா... மேலும் பார்க்க

புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். வேலூா... மேலும் பார்க்க