பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
அரசுக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய
இந்த கண் பரிசோதனை முகாமுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞான. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் ந. சாரதாதேவி வரவேற்றாா்.
டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் தீபக், தேவநாதன், விக்னேஷ், மஸ்தான் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், கல்லூரி பேராசிரியா்களுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
முகாமில் மூத்த பேராசிரியை வ. உமா மற்றும்
பல்வேறு துறைத் தலைவா்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா்.
நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜா. அருணாச்சலம் நன்றி கூறினாா்.