அவிநாசி அரசுப் பள்ளியில் நெகிழி பை ஒழிப்பு விழிப்புணா்வு
அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெகிழிபை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, பரிசளிப்பு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் புனிதவதி தலைமை வகித்தாா். நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாநகரத் தலைவா் ஜான் வல்தாரிஸ், பள்ளி வளா்ச்சி கூட்டமைப்புத் தலைவா் தங்கவேல், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உதவி காவல் ஆய்வாளா் பத்மாவதி போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.