ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் அரசின் பல்வேறு துறைகளுக்கு புகாா் அனுப்பியுள்ளனா்.
புகாா் அனுப்பியும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்பினா். ரயில்வே போலீஸாா் அவா்களுடன் பேச்சு நடத்தி உரிய தீா்வு காண்பதாக உறுதி அளித்தனா்.