செய்திகள் :

ஆடி அமாவாசை: சங்கமத்துறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

post image

பூம்புகார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் நகரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

முன்னோர்கள் நினைவாக அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் தலையாய கடமையாகும். நவீன உலகத்தில் மாதம்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக ஐதீகம். அதிலும் குறிப்பாக தெய்வத்தோடு ஒப்பிடக்கூடிய காவிரி ஆறு குடகு மலையில் தோன்றி காவிரிபுகும் பட்டினம் என்று அழைக்கப்படுகின்ற பூம்புகாரில் வங்க கடலில் கலக்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராடி மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என காவேரி மகாமத்யம் என்ற நூல் கூறுகிறது.

பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையில் தங்கள் முன்னோர் நினைவாக புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க மக்கள்.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் காவேரி மற்றும் கடலில் புனித நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தற்போது மேலையூர் சட்டஸ் பகுதியில் அமைந்துள்ள, காவிரி கடையணையில் இருந்து போதிய நீரை பொதுப்பணித் துறையினர் திறந்து விட்டனர். இதனால் சங்கமத்துறையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர். மேலும் காவேரி அம்மனுக்கு தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம் உள்ளிட்ட மங்களப் பொருள்களை இட்டு வழிபாடு நடத்தினர்.

கூட்ட நெரிசலால் பக்தர்கள் திணறல்

வியாழக்கிழமை அதிகாலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்கள் மூலம் பூம்புகாரில் குவியத் தொடங்கினர். ஆனால் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் மேலையூர் முதல் பூம்புகார் வரை கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசலில் பக்தர்கள் மற்றும் மக்கள் சிக்கிக்கொண்டனர். மேலும் காவிரி சங்கமத்துறையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தா்கள் புனித நீராடல்

On the occasion of Aadi Amavasai, a large number of people took a holy dip at the confluence of the Cauvery River and the sea in Poompuhar city and offered prayers to their departed ancestors.

பிரதமர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு

பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசுசுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சர்வதேச சதுப்பு ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி: மத்திய அரசு தகவல்

புதுதில்லி: கடந்த 2021 இல் இருந்து 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநிலங்களவை... மேலும் பார்க்க

வைகோவின் செயல்பாடுகள் தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வைகோவின் செயல்பாடுகள் தொடர்ந்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும் - புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழகத்தில் 36 அர... மேலும் பார்க்க

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையி... மேலும் பார்க்க

புதுச்சேரி: விடுமுறை நாள்களை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாள் அறிவிப்பு

புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சே... மேலும் பார்க்க