OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தா்கள் புனித நீராடல்
ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீராடி தம்மோடு வாழ்த்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. ஆடி அமாவாசை,தை அமாவாசை,மகாளய அமாவாசை நாள்களில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் வருகை தந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புதன்கிழமை முதலே ராமேசுவரம் வருகை தந்தனர். வியாழக்கிழமை காலையில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடி தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

பின்னர். ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று அங்குள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டனர்.
கட்டண தரிசனம் ரத்து
இன்று கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீராமர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று தீர்த்த வாரி நடைபெற்றது.

ஆடி அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!
சிறப்பு அரசுப் பேருந்துக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்திற்கு சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
போலீசார் பாதுகாப்பு
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது இடங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. இடையூறு இன்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டன.
அக்னி தீர்த்த கடற்கரையில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால், பக்தர்கள் பாறையில் நடந்து நீண்ட தூரம் சென்று கடலில் நீராடினர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று பக்தர்கள் நீண்ட தூரம் கடலுக்கு செல்லுவதை தடுத்தும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.