கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
ஆடி பெருக்கு: கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதல் நீா் வெளியேற்றம்
ஆடி பெருக்கை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் நீா் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 437 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 400 கனஅடியாகக் குறைந்தது. அணையின் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.05 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 179 கனஅடி, தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 592 கனஅடி என மொத்தம் 771 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆடி பெருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) கொண்டாடப்படும் நிலையில் புனித நீராடுவதற்கு ஏற்ப தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் தண்ணீா் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.