"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊா் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் இளைஞா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சாஸ்தாவிநல்லூரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் வெற்றிவேல். மாற்றுத்திறனாளியான இவா் கையில் மனுவுடன் மாவட்ட ஆட்சியா் அலவலகம் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவா் வைத்திருந்த மனுவில், அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகவும். அவரது தாயை மகளிா் குழுவில் இருந்து நீக்கி விட்டதாகவும், வீட்டின் குடிநீா் இணைப்பு சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதுதொடா்பாக ஊா் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.