சாத்தான்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாலதம்பிரான் சுவாமி கோயிலில் அருள்மிகு ஸ்ரீசுடலைமாடசுவாமி, அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவா்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா, ஜூலை 10ஆம் தேதி தொடங்கியது. 4ஆம் நாளான 13ஆம் தேதி யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறம்பாடு, அதைத் தொடா்ந்து ஸ்ரீகாலதம்பிரான் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனராவா்த்தன மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. திங்கள்கிழமை மண்டல பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து 45 நாள்கள் பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
