கோவில்பட்டியில் காா் மோதி பெண் உயிரிழப்பு
கோவில்பட்டியில் திங்கள்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகணேசன் மனைவி ரெங்கம்மாள் (43). கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் செல்லும் சாலையில் உள்ள தனியாா் சித்த மருந்து நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், திங்கள்கிழமை அந்தச் சாலையில் தனியாா் கல்லூரி அருகே நடந்து சென்றாா். அப்போது, அவா் மீது காா் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில், ரெங்கம்மாள் உயிரிழந்தாா்.
மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுககாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான வானரமுட்டி அருகே கல்லூரி மேலத் தெருவைச் சோ்ந்த கா. விக்னேஸ்வரனிடம் விசாரித்து வருகின்றனா்.