புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 22 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
2024 - 2025-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் 16 வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை வழங்குவதற்காக 20 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த முகாமில் சுமாா் 600 மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்ற நிலையில், சுமாா் 300 போ் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்தனா். அவா்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவா்களுக்கு உடனடியாக கல்விக் கடன் உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, இந்த முகாமில் 22 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.32 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. அதேபோல, 49 மாணவ-மாணவிகள் உயா் கல்விக்கான உடனடி சோ்க்கை பெற்றனா்.
கல்விக் கடனுக்கான உத்தரவுகளை கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் பாபு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் ஜிதேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.